காணாமல் போனோர் குடும்பங்கள் சாராயமடிக்கின்றன:தமிழரசு!


இலங்கை தமிழரசு கட்சியின் ஞாயிறு விடுமுறை நாள் மாநாடு யாழப்பாணத்தில் இன்று திக்குமுக்காடிப்போனது.

மாநாடு நடக்கும் யாழ்.வீரசிங்கம் மண்டபம் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரகளின் உறவுகள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழராய்ச்சி மாநாட்டு நினைவு தாபி முன்பு குவிந்த அவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா. சம்பந்தன்; என அனைவரையுமாநாடு இடம்பெற்ற வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே வருமாறு கோரி அவர் கோசமிட்டனர்.

தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு காண கோசமிட்ட அவர்களை தமிழரசு சார்ந்தோர் சிவசக்தி ஆனந்தன் அனுப்பியவர்கள் எனவும் சாராயம் கொடுத்து விடப்பட்டதாகவும் தெரிவிக்க தாய்மார் கடுமையான சீற்றமடைந்து போராட்டத்தை தொடர்கின்றனர். 

No comments