மர அழிப்பு:நகைக்கடைகாரர் கைது?



கிளிநொச்சியில் வீதி ஓர மரத்திற்கு அசிட் ஊற்றி பட்டுப்போக முற்சித்த நகைக்கடைகாரர் கைதாகியுள்ளார்.

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றை அருகில் உள்ள நகை கடைக்காரர் ஒருவரே அசிட் ஊற்றி பட்டுப்போகச்செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

மேற்குறித்த இடத்தில் பச்சையாக பரந்து விரிந்து பாரிய மரம் ஒன்று காணப்படுகிறது. இந்த மரத்தின் கீழ் முச்சக்கர வண்டி தரிப்பிடம் உண்டு, அத்தோடு பேரூந்துக்காக காத்திருக்கின்ற மக்கள் மற்றும் வெயிலுக்கு ஓதுங்குகின்ற மக்கள் என பெருமளவானவர்கள் கூடுகின்ற இடமாகவும் அது உள்ளது.

இந்த மரத்தையே குறித்த நகைக்கடைக்காரர் அசிட் ஊற்றி பட்டுப்போகச்செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து பொலீஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் மரத்தை சுற்றி உள்ள மண் அகற்றப்பட்டு புதிய மண் இடப்பட்டு நகைக்கடைகாரால் சீர் செய்யப்படுவதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தனது நகைக்கடை வெளியே தெரியாதிருப்பதாக ஒருபுறமும் ஓட்டோகாரரது அடாவடி காரணமாக மரத்தை பட்டுப்புhக வைக்க முற்பட்டதாக மற்றொரு செய்தியும் தெரிவிக்கின்றது.

No comments