நாவாந்துறையிலும் கால் வைத்த றிசாத்?


யாழ்ப்பாணம் நாவாந்துறை – பொம்மை வெளியில் அரச காணியை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்துவைத்துள்ளார் என்று தெரிவித்தும் தமக்கு அந்தக் காணி பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கோரியும் அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளுர் தமிழ் மக்களால் இன்று மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன்; சிறப்பு அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாவாந்துறை பொம்மைவெளிச் சந்தியில் முன்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்ட பயண்படுத்தப்பட்ட காணியிலேயே குழப்ப நிலை ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையால் முன்னர் கழிவுகள் கொட்டப்பட்ட காணி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஏற்பாட்டில் மாநகர சபை உறுப்பினரான நிலாம் என்பவரால்  வேலியிடப்பட்டது. அந்தக் காணியில் முஸ்லிம்களை குடியேற்றும் வகையில் தொடர்மாடி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments