இலங்கையில் தூக்கில் தொங்க விட ஆள் ரெடி?


அலுக்கோசு பதவிக்காக விண்ணப்பித்தவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட 26 பேருக்கு இன்று நடைமுறைப்பயிற்சிகள் வழங்குவதற்கு, சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் பயிற்சி பாடசாலையிலேயே இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
குறித்த பதவிக்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின் பின்னர், 26 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு இன்றும் நாளையும் வழங்கப்படும் பயிற்சிகளின் போது அதிக புள்ளிகளை பெறும் இருவருக்கு அலுக்​கோசு பதவி வழங்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments