கசிப்புடன் வியாபாரிகள் கைது!

மட்டு. ஏறாவூர் மொறக்கொட்டாஞ்சேனை பகுதியில் கசிப்பு வியாபாரிகள் இருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை கைது செய்ததுடன் 15 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மொறக்கொட்டாஞ்சேனை பகுதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 5.30 மணிக்கு பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து மோட்டார்சைக்கிளில் இரு கலனில் 15 லீற்றர் கசிப்பை வியாபாரத்திற்கு எடுத்துக் கொண்டு வந்த நிலையில் பொலிசார் சுற்றிவளைத்து மொறக்கொட்டாஞ்சேனை ஏரிக்க வீதியைச் சேர்ந்த 35, 38 வயதான நபர்களையே கைது செய்ததுடன்  மோடடர்சைக்கிள் கசிப்பு என்பவற்றை மீட்டனர்

இதில் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments