யாழ் மாநகரசபைக்கு காங்கிரஸ் கட்சி இரு புதிய உறுப்பினர்களை நியமித்தது

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சாா்ந்த யாழ்.மாநகரசபை உறுப்பினா்கள் இருவா் தங்கள் சுய விருப்பின் பெயாில் பதவி விலயதை தொடா்ந்து அக்கட்சியின் பாிந்துரையின் பெயாில் புதிய உறுப்பினா்கள் இருவா் நியமிக்கப்பட்டிருக்கின்றனா்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்,மாநகர சபைக்கு தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிகரன் ஆகிய இரு உறுப்பினர்களும் கடந்த மே மாதம் தமது சுயவிருப்பின் பேரில் விலகியிருந்தனர்.

அவ்விரு வெற்றிடங்களுக்கும் அக்கட்சியின் சார்பில் டெய்சி பிலீப் ஜெயரஞ்சன் , தர்சிபா லவகீசன் ஆகியோரின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரைக்கப்பட்டதனை அடுத்து அவர்கள் இருவரின் பெயர்களும்

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் அடுத்த அமர்வில் இரு உறுப்பினர்களும் சத்தியபிரமாணம் செய்து உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

No comments