தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரினார் - ரிசாட், மகேஸ் விசாரணைக்கு

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தெடா்பாக சாட்சியமளிக்க வருமாறு  இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சா் றிஷாட் பதியூதீன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒரு சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இராணுவ தளபதிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது

முன்வைக்கப்பட்ட நிலையில் அது குறித்து விளக்கம் கோரவே இருவருக்கும் தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இராணுவத் தளபதி ஊடகங்கள் முன்னிலையில் சில கருத்துக்களை முன்வைத்ததுடன்

இந்தியாவில் இருந்து திட்டங்கள் வகுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து அரசியல் மட்டத்தில் சர்ச்சையை கிளப்பிய போதிலும் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்று நிலைப்படும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த விடயங்கள் குறித்து இன்று தெரிவுக்குழு விசாரணைகளை நடத்தும் என எதிர்பார்கலாம். அதேபோல் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களில் ஒருவருடன் வியாபார தொடர்புகளை வைத்திருந்தார்

என்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் அமைச்சராக இருந்த சந்தர்ப்பங்களில் தாக்குதல் குறித்த விசாரணைகளில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்ட்டுள்ள நிலையில் அவரையும்

தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது முதல் சாட்சியமாக இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயகவிடம்

விசாரணைகள் நடத்தப்படும். அடுத்ததாக பிற்பகல் 3 மணிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவுள்ளார். அதேபோல் மேலும் ஒரு அரச அதிகாரியும் வரவழைக்கப்படவுள்ளதா தெரிவுக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments