ஆப்படிக்க தயராகின்றது இலங்கை அரசு?

அரசியல் கைதிகளின் வழக்குகளை கையிலெடுத்து விடுதலைப்புலிகள் இன அழிப்பில் ஈடுபட்டதான பிரச்சாரத்திற்கு இலங்கை அரசு தயாராகியுள்ளது.

அதற்கேதுவாக அனுராதபுரம் சிறையில் தடுப்பிலுள்ள அரசியல் கைதிகளான சுலக்சன் உள்ளிட்ட சிலரை இறுதி யுத்த காலத்தில் சரணடைந்த படையினரை கொன்றாக குற்றஞ்சுமத்தி தண்டிக்க நகர்வுகள் இன்று உச்சம் பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் இன்று அவர்கள் வவுனியா நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென்ற அறிவிப்பு அனைவரது கவனத்தையும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 

இதனிடையே லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றம். சாட்டப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொழும்பு தெமட்டக்கொடையை சேர்ந்த முத்தையா - சகாதேவன் , வயது -61 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் 2005ம் ஆண்டு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தொடர்பில் வழக்கு இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 14 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையில் இருந்தார்.

இவ்வாறு சிறையில் இருந்த நிலையில் சுகயீனம் காரனமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார.

இவ்வாறு மரணமடைந்தவரின் சடலம் தற்போது தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. -

No comments