அவசரமில்லையென்கிறார் றிசாட்?


முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்காகவே அமைச்சினை மீள பொறுப்பேற்றதான குற்றச்சாட்டின் மத்தியில் தனக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை,  எவ்விதத்திலும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்புகளை பெறுவதற்கு தமக்கு அவ்வளவு அவசரம் இல்லையென்றும், முதலில் இடம்பெறும் விசாரணைகளின் அறிக்கை கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்த நேரத்திலும் அனைத்து விசாரணைகளுக்கு தயாராகவிருப்பதுடன், அதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அவருடன் பதவியை ராஜினாமா செய்த இரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சு பதவியினை பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments