காணி பிடிப்பதில் பிக்குமாரும் ஆமியும் போட்டி!


பௌத்த பிக்குகளால் இன்று தரைமட்டமாகி அத்திவாரம் பெயர்க்கப்பட்டு பௌத்த விகாரையாக்க முற்படும் கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் 2001ம் ஆண்டில் இருந்த தோற்றத்தை மருத்துவர் சிவபாலன் வெளிப்படுத்தியுள்ளார்.

அங்கு பிள்ளையார் ஆலயம் இருக்கவில்லையெனவும் பௌத்த விகாரையினை உடைத்து அது உருவாக்கப்பட்டதாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் இருந்தமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே மன்னார் நொச்சிமோட்டை மற்றும் ஜோசப் இராணுவ முகாமுடன் இணைந்த பிரதேசம் உள்ளிட்ட இரு காணிகளும் முழுமையாக படையினரிற்காக கையகப்படுத்தப்படும் அந்நிலங்கள் உரியவர்களிற்கு வழங்க முடியாது என இராணுவம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஐ.நா செப்ரெம்பர் அமர்விற்கு முன்னர் படையினர் வசமுள்ள நிலம் தொடர்பில் உறுதியான ஓர் நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பில் அமைச்சர் திலக் மாரப்பன் நேற்று முன்தினம் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இச் சந்திப்பில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் மாவட்டச் செயலாளர் , பிரதேச செயலாளர்கள் , முப்படைகளின் மாவட்டத் தளபதிகள் மற்றும் மாகாண காணி ஆணையாளர் பொலிசார் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பிலேயே மேற்படி விபரங்களை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments