மீண்டும் முல்லையில் வந்திறங்கிய சிங்களவர்கள்!


கொக்கிளாய் முதல் முல்லைதீவு வரை முன்னெடுக்கப்படவுள்ள பாரிய பௌத்த மயமாக்கல் திட்டத்தை அமுல்படுத்துவதில் சிங்கள தேசம் மும்முரமாகியிருக்கின்றது.

இதற்கேதுவாக சிங்கள மக்களை அழைத்து வந்து அவர்களிற்கு மூளை சலவை செய்வதுடன் ஆர்ப்பாட்டங்களிலும் சிங்கள தேசம் ஈடுபட்டுவருகின்றது.

அவ்வகையில் முல்லைதீவின் செம்மலை நீராவியடி பழைய செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு அனுராதபுரம் பகுதியிலிருந்து மூன்று பஸ்களிலிருந்து சிங்கள மக்கள் அழைத்துவரப்பட்;டு போராட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுதுள்ளனர்.பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மற்றும் மூன்று பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் இன்றைய தினம் அங்கு பொசன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.


தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் பிக்குகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளனர். அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகள் உரையாற்றுகையில் பௌத்த விகாரையினை உடைத்து அங்கு பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது இந்த பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்ததாக தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தேரர்களால் உரையாற்றப்பட்டது .

அதன் பின்னர் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சிங்கள மக்களே இல்லாத இப்பகுதயில் இவ்வாறு அழைத்துவரப்பட்ட சிங்களவர்கள் சகிதம் ஒரு மாதத்தினுள் நடத்தப்படும் இரண்டாவது போராட்டம் இதுவாகும்.

No comments