முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேச்சு! திருமா மீது அதிரடி வழக்கு;

கடந்த 18ஆம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தீவிரவாதி என்றால் ஆங்கிலத்தில் extremist, பயங்கரவாதி என்றால் terrorist, இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்ற திருமாவளவன், ”நான் சொல்லுகிறேன் காந்தியடிகளே ஒரு இந்து தீவிரவாதிதான். காந்தியடிகளைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. இதை நான் சொல்வது இந்து மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அல்ல” என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் இந்து மக்கள் முன்னணியினர் அசோக் நகர் காவல் நிலையத்தில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே அமைதியைச் சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments