ஐந்தரை ஆண்டுகளில் 7500 குழந்தைகள் கொல்லப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்! ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை;

பெரும் போர் சூழ்ந்துள்ள ஏமன்நாட்டில்  கடந்த 5.5 ஆண்டுகளில் 7,508 குழந்தைகள் ' கொல்லப்பட்டு அல்லது காயப்பட்டு முடமாக்கப்பட்டுள்ளது என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட இந்த  ஐ. நாவின் அறிக்கையின்படி, விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள், மோதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், சுரங்கங்கள் மற்றும் ஏனைய வெடிக்காத போர் ஆகியவற்றின் காரணத்தினால்  கடந்த 5 1/2 ஆண்டுகளில் ஏமனில் 7,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயப்படுத்தப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏமன் நாட்டில் ஐநா சபையின் கண்காணிப்பு அதிகப்படுத்தியுள்ளதாகவும் அதனால் இந்த புள்ளிவிபரங்கள் இன்னும் மோசமானதாக இருக்கக்கூடும் எனதெரிவித்துள்ளது.

No comments