காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் வைத்த காவல்துறை;

அமெரிக்காவில் காட்டுப் பகுதியான ஜார்ஜியா என்னுமிடத்தில்  கட்டப்பட்ட நெகிழி பைக்குள் பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்பதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து  குழந்தை அழும் சத்தத்தை வைத்து காவல்துறையினர் குழந்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கட்டப்பட்ட நெகிழி பைக்குள் வைக்கப்பட்டிருந்த குழந்தையை  மீட்கும்  போது காவல்துறை அதிகாரி அதை காணொளியாக பதிவுசெய்துள்ளார்.இந்த காணொளி காட்சியினை குழந்தையை அடையாளம் காணுவதற்காக  காவல்துறையினர்  தங்கள் கீச்சு பக்கத்தில்வெளியிட்டுள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை உரியவர்களிடம் சேர்க்கும்வரை  ‘இந்தியா' என்று காவல்துறையினர் பெயரிட்டுள்ளனர். காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை இந்தியா நலமாக உள்ளதாகவும் அக்குழந்தையின் தாய் யாரெனகண்டுபிடிக்கும்முயற்சியில்இறங்கியுள்ளதாகவும்,அதேவேளை
'இந்தியா' என்ற இந்த குழந்தையை தத்தெடுப்பதற்கும் மக்கள் ஆர்வமாக இருப்பதாகவும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments