ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 600 கி.மீ மனிதச்சங்கிலி போராட்டம்;

ஹைட்ரோ கார்பன் நாசகாரத் திட்டத்தைக் கைவிடக் கோரும் 500 க.மீ நீள மனிதச் சங்கிலிப் போராட்டம்  ஒன்று தமிழகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலமை தாங்கி நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்தின் தலை மீது கல்லைத் தூக்கிப் போடும் வேலையை மத்திய பா.ஜ.க. அரசு தொடங்கிவிட்டது. காவிரி பாசன பகுதி மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு எடுக்கும் திட்டங்களை எதிர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் அறவழியில் போராடி வருகின்றனர்.

தமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹட்ரோ கார்பன், சாகர்மாலா, சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை, விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும், காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிய ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில், மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற்றது.

 விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.
இந்த மனிதச் சங்கிலி அறப்போரட்டத்தில் திமுகவினரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments