யாழ்.பல்கலையில் நினைவேந்தல்!


மாணவ தலைவர்களது கைதுகள் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை தாண்டி இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை  நினைவு  முன்றலில் பல்கலைக்கழக சமூகம் நினைவு கூர்ந்துள்ளது.

இந்நிகழ்வு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டதன்படி யாழ்பல்கலைக்கழக மாணவர்களும்,கல்விசார் மற்றும் சாரா ஊழியர்களும் இணந்து நினைவேற்றலில் பங்கெடுத்திருந்தனர்.

பொது சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தடைகள் தாண்டி நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை  நினைவு  முன்றலை சட்டவிரோத கட்டடமென படைத்தரப்பு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அச்சுறுத்தியிருந்தமை தெரிந்ததே.

No comments