அருந்தவபாலன் எம்பியாவார்: விக்கினேஸ்வரன் ஆரூடம்!


தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளரும்,கொள்கைபரப்புச் செயலாளருமான க.அருந்தவபாலன் எதிர்வரும் தேர்தலில் வென்று நாடாளுமன்று செல்வார் என முன்னாள் வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
க.அருந்தவபாலன் அவர்களின் மனைவி இயற்கை எய்தியிருந்த நிலையில் அஞ்சலி உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இது அரசியல் பேசும் இடமல்லாத போதும் உண்மையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் க.அருந்தவபாலன் வென்று நாடாளுமன்று செல்வது சதியால் தடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளரும்,கொள்கைபரப்புச் செயலாளருமான க.அருந்தவபாலன் எதிர்வரும் தேர்தலில் வென்று நாடாளுமன்று செல்வதை மறைந்த பாரியார் விண்ணிலிருந்து பார்த்து ஆசீர்வதிப்பார் என தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய அருநதவபாலன் தோற்கடிக்கப்பட்டு சரவணபவன் சதியால் வெல்லவைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றமை தெரிந்ததே.  

No comments