அகதிகள் தொடர்பில் ஜெர்மன் முக்கிய முடிவு!

புகலிடம் கோரும் சிரியா அகதிகளுக்கு  ஜெர்மன் அரசு  தகுந்த பாதுகாப்பு வழங்க இன்றும் தயாராக இருப்பதாக ஜெர்மன்  உள்துறை அமைச்சர் ஹொஸ்ட் ஸீஹோஃபர்( Horst Seehofer) ஊடகவியாலாளர்களின் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே விண்ணப்பித்த தஞ்சக் கோரிக்கைகள் குறித்து   எந்த முடிவுகளையும் தங்கள் எடுக்கப்போவதில்லை என்றும், சிரியாவில் நிலைமை சரியாகும் வரை அவர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த செவ்வாயன்று அதிபர்  அங்கேலா மேர்க்கெல் உரையாற்றுகையில்  ஜேர்மனி என்றும் அகதிகளை அரவணைக்கும் நாடக இருக்கும் எனவே அனைவரும்   ஒருங்கிணைந்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments