பிளாஸ்டிக் கழிவினால் 10 லடசம் பேர் இறப்பு!

பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் போவதால்ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் பேர் பலியாகிப்போவதாக Tearfund எனப்படும் அனைத்துலக மேம்பாட்டு அமைப்பு  தெரிவித்துள்ளது.
அண்ணல் பயன்படுத்துவோர் நுகர்வுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அரசாங்கங்களும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

முறையாக அப்புறப்படுத்தப்படாமல் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களில் தேங்கும் தண்ணீரால், மலேரியா, டெங்கி, டைஃபாய்ட் உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்கள் பல்கிப் பெருகுகின்றன.

பிளாஸ்டிக் குப்பையில் குடியேறும் எலிகள், ரேபிஸ், பிளேக் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாகின்றன.

பிளாஸ்டிக் குப்பைகள் எரிக்கப்படும்போது அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையை சுவாசிக்கும் குடியிருப்பாளர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர், இதனால் நோய் தாக்கத்துக்கு உள்ளாகி மரணம் அடைவது குறிப்பிடத்தக்கது.

No comments