யாழில் 14 பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் திடீர் சோதனை




யாழ்.நகாில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட14 பள்ளிவாசல்கள் ஒரு நேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு பாாிய தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பாடசாலைகளும் மீண்டும் வழமைபோல இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாட்டில் மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற அச்சநிலை காணப்பட்டு வருகின்றது.

அண்மையில் கூட யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளீர் கல்லூரிக்கு தீவிரவாத இயக்கத்தின் பெயரில் துண்டு பிரசுரம் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட்து.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள்,முக்கிய இடங்கள் பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு தரப்பினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது ஆங்காங்கே வெடி பொருட்கள் மற்றும் மர்ம பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று யாழ் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் ஒரே நேரத்தில் சோதனையிடப்பட்டது.



எனினும் அங்கிருந்து எவ்வித பொருட்களுமோ சந்தேக நபர்களோ கைது செய்யப்படவில்லை. இலங்கை இராணுவத்தினர்,

பொலிஸார்,விஷேட அதிரடிப்படையினர் ஆகியயோர் இன்று காலை 10 மணியில் இருந்து 1 மணி வரை பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்ட்து.இந்த தேடுதல் வேடடையில் தேசிய ஜவுகீத் தமா அத் அமைப்பினரின் பள்ளிவாசல் 14  பள்ளி வாசல்கள் பாதுகாப்பு தரப்பினரால் சோதனையிடப்பட்ட்து.

No comments