இலஞ்சம் வாங்கி பிணை விடுவிப்பா?


கடந்த பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட விசாரணைப் பிரிவு இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளின் தவறு காரணமாகவே இந்த சந்தேகநபர்களுக்குப் பிணை பெற்றுக் கொள்ள முடிந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படுமாயின் உரிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடாத்திய பயங்கரவாதியான இம்ஸாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான செம்புத் தொழிற்சாலையில் சேவைபுரிந்த 9 பேரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

No comments