தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!

சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 32 வயதுடைய சதீஸ்குமார் நவநீதமலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டின் முன் இருந்த மரத்தில் குறித்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வேலை நிமித்தம் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்த அவரது கணவர் நேற்றையதினம் வீடு திரும்பிய சமயத்தில் இன்று அதிகாலை குறித்த பெண் வீட்டிற்கு முன்பாகவுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையிரனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment