தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு அலுவலகக் காணி வழங்கியவர் கோத்த ராஜபக்சவே

முன்னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்சவே தௌகீத் ஜமாத் அமைப்­பின் அலு­வ­ல­கத்தை நிறு­வக் காணி ஒன்­றைப் பெற்­றுக் கொடுத்­துள்­ளார் என்று ஐக்­கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்­பின துசார இந்­து­நில் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

கொழும்­பில் நேற்று நடத்­திய ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கோத்­த­பாய ராஜ­பக்ச பல முயற்சி­களை மேற்­கொண்­டார். 241 ஏ, சிறி சத்­தர்வ மாவத்தை, கொழும்பு என்ற முக­வ­ரி­யில் உள்ள காணியை தௌகீத் ஜமாத் அமைப்­புக்­குக் கோத்­த­பாய ராஜபக்ச பெற்­றுக் கொடுத்­துள்­ளார்.

அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்­கும் 200 பள்­ளி­க­ளைக் கட்­டி­ய­தா­கப் பசில் ராஜ­பக்ச தெரி­வித்த கருத்­துக்­கள் சமூக வலைத்­த­ளங்­க­ளில் வெளியாகியுள்­ளன. இந்த சம்­ப­வத்­துக்­கும் கோத்­த­பா­யவே உறு­து­ணை­யாக இருந்­தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments