சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடங்கியது

நீர்கொழும்பு பகுதியில் இன்று மாலை இரண்டு சிங்கள முஸ்லீம் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

நீங்கொழும்பு வன்முறையின்போது வாகனங்களும் தீ வைத்து கொளுத்தபட்டன. அதனை தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் நாளை திங்கட்கிழமை காலை 07 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவங்களை அடுத்து 10 நாட்கள் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் மீதும் அவை முடக்கப்பட்டுள்ளன.

No comments