வடக்கு பாடசாலைகள் 6 ஆம் திகதி ஆரம்பம்

வடமாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், பாடசாலைகள், தனியாா் கல்வி நிலையங்களுக்கு பொதுப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 1000 பேர்கள் படிக்கின்றனர். அவற்றில் எந்தொரு பாதுகாப்பு தன்மைகள் கூடமால் இருக்கின்றது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நகரபகுதியில் உள்ள 84  தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன. ஏனைய பகுதியில் 290 தனியார் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.

இதில் எந்தொரு கல்வி நிலையத்தின் இயக்குனரும் பதிவு செய்ய முன்வரவில்லை அவர்கள் முன்வரவேண்டும். அப்போது தான் அவ்வாறான கல்வி நிலையங்களுக்குப் பாதுகாப்பினை வழங்கமுடியும்.

பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக கல்வி நிலையத்திற்காக பாதுகாப்பினை கொடுக்கமுடியும். அதுவும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.

வடமாகாணத்தின் எதிர்வரும் 06 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

பாடசாலை சமூகம் இராணுவமயமற்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியதால், பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர்கள்,

பெற்றோர் மற்றும் சாரணர்களை உள்ளடக்கிய சிவில் விழிப்புக் குழுக்கள் விழிப்புடன் செயற்படும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக எந்தவொரு ஆசிரியரும் தமக்கு மேலதிக பாதுகாப்பு வேண்டும் எனக் கோரினார் அதனை கருத்தில் எடுத்து பாதுகாப்பு வழங்கத் தயாராக உள்ளோம்  என்றார்.

No comments