வெளிநாட்டு தூதர்களிடம் கெஞ்சிய ரணில்


“பாதுகாப்புக் காரணங்களால் இலங்கைக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் எனத் தங்கள் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள்.”

– இவ்வாறு இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து நிலவிய அச்சுறுத்தல் நிலைமை மாறி, நாடும் நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். எனவே, இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு, தங்கள் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை உடன் தளர்த்துங்கள்” என்று இதன்போது பிரதமர் ரணில் மேலும் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடனான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (24) நடைபெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கோரினார்.

No comments