பள்ளிவாசல்களைப் படையினர் அவமதிப்பதாக குற்றச்சாட்டு

தேடுதல் நடவடிக்கைகளின்போது பள்ளிவாசல்களை அவமதிக்கும் வகையில் பாதுகாப்பு படையினா் நடந்து கொள்வதாக யாழ்.ஐந்துசந்தி பொிய மாஹதீன் ஜிம்மா பள்ளிவாசல் நிா்வாகி ஷரபுல் அனாம் கூறியுள்ளாா்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஐந்து சந்­திப் பகு­தி­யில் சோதனை மேற்­கொண்ட சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரும், பொலி­ஸா­ரும் கால­ணி­க­ளு­டன் பள்­ளி­வா­ச­லுக்­குள் நுழைந்­த­னர்.

சோத­னைக்கு வந்த சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மற்­றும் பொலி­ஸா­ரி­டம் கால­ணி­க­ளைக் கழற்­றி­விட்­டுச் சென்று சோத­னை­களை மேற்­கொள்­ளுங்­கள் என்று பல தடவை கோரி­னோம்.

ஆனால் அவர்­கள் அதற்­குச் செவி சாய்க்­க­வில்லை. கால­ணி­க­ளு­டன் உள்ளே சென்­றார்­கள். பள்­ளி­வா­சல்­களை அவ­ம­திக்­கும் வகை­யில் நடந்து கொண்­ட­னர்.

எமது மனங்­கள் புண்­ப­டும்­வ­கை­யில் பேசி­னார்­கள் என்று அவர் வேத­னை­யோடு குறிப்­பிட்­டார். கடந்த ஈஸ்­ரர் தினத்­தன்று நாட்­டில் பல இடங்­க­ளில் குண்டு வெடிப்­புக்­கள் நடத்­தி­ருந்­தன.

அந்­தத் தாக்­கு­த­லுக்கு முஸ்­லிம் அடிப்­ப­டை­வா­தக் குழு­வொன்று உரிமை கோரி­யி­ருந்­தது. தாக்­கு­தலை அடுத்து நாட்­டில் அவ­சர காலச் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுத் தேடு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

தாக்­கு­த­லு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் தேடப்­பட்­டுக் கைது செய்­யப்­ப­டும் அதே­வேளை சாதா­ரண முஸ்­லிம் மக்கள் இந்­தத் தேடு­தல் நட­வ­டிக்­கை­கள் மற்­றும் விசா­ர­ணை­க­ளின்­போது பல்­வேறு துன்­பங்­களை

எதிர்­கொள்ள வேண்டி ஏற்­பட்­டுள்­ளது என்று பல தரப்­பி­ன­ரால் சுட்­டிக் காட்­டப்­ப­டு­கின்­றது. அனைத்து முஸ்­லிம் மக்­க­ளை­யும் சந்­தே­கக் கண்­ணோடு பார்க்­கும் பாது­காப்­புத் தரப்­பி­னர்

அவர்­க­ளு­டன் கடு­மை­யான முறை­யில் நடந்­து­கொள்­கின்­ற­னர். கடுந்­தொ­னி­யில், அவ­ம­திக்­கும் வகை­யில் பாது­காப்­புத் தரப்­பி­னர் நடந்து கொள்­கின்­ற­னர்,

அன்­றா­டம் அச்­சத்­து­ட­னேயே வாழ்­கின்­றோம் என்­றும், தமது வாழ்­வா­தா­ரச் செயற்­பா­டு­க­ளைக் கூடக் கொண்டு நகர்த்த முடி­யாது கையறு நிலை­யில் உள்­ளோம் என்­றும் அவர்­கள் கவ­லை­யு­டன் கூறு­கின்­ற­னர்.

வடக்­கி­லும் முஸ்­லிம் மக்­கள் அதி­கம் வசிக்­கும் பகு­தி­க­ளில் சோதனை நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­பட்­டுள்ள நிலையில், பாது­காப்­புத் தரப்­பி­னர் தம்மை அச்­சு­றுத்­தும் வகை­யி­லும்,

அடக்கி ஒடுக்­கும் வகை­யி­லும் செயற்­ப­டு­கின்­ற­னர் என்று முஸ்­லிம் மக்­க­ளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்வா­றான செயற்­பா­டு­கள் சாதா­ரண முஸ்­லிம் மக்­க­ளுக்கு

மிகுந்த வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அவர்­கள் தற்­போது தனித்து விடப்­பட்­ட­தாக உணர்­கின்­ற­னர். பயங்கர­வா­தச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­வர்­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும்

என்­ப­தில் மாற்­றுக் கருத்­துக்­கள் இல்லை. ஆனால் சாதா­ரண மக்­க­ளைக் குற்­ற­வா­ளி­கள் போன்று நடத்­தும் போக்கு வேதனை தரு­கின்­றது என்று முஸ்­லிம் மக்­கள் கவ­லை­யு­டன் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

No comments