நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ் குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில்

இன்று காலை இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ் குற்றப்புலனாய்வு தலைமையகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.226 ரக விமானத்தில் இலங்கையை வந்தடைந்த அவர், இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரின் பொறுப்பில் ஏற்கப்பட்டார்.

இதையடுத்து, அவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

மாகந்துரே மதுஷ் என அறியப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஷித என்ற அவர், இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற பிறந்ததின விருந்துபாசரம் ஒன்றில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுள் 30 பேர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மதுஷ் நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments