இராணுவப் பாதுகாப்புக் கேட்க வைத்துவிட்டார்கள் - மாவை

தற்போதைய சூழ்நிலையில், தங்களை அறியாமலேயே இராணுவத்திடம் பாதுகாப்பு கோரும் நிலைக்கு தாங்கள் உள்ளாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இந்த விடயத்தில் தாங்கள் வலிந்து கோரிக்கைகளை முன்வைப்பது தார்மீக ரீதியாக தங்களுக்கு பாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments