எங்களை விட்டுவிடுங்கள் - மைத்திரி

“ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது. எங்கள் நாட்டை தனியே விட்டுவிடுங்கள் என்பதே அந்தச் செய்தி.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஸ்கை நியூஸுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக் கோரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை சர்வதேச ஊடகங்களில் கவனத்தை சட்டெனப் பெற்று உலக அளவில் வைரலாகியுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் சிறிய நாடுகளை இலக்குவைக்கும் தந்திரோபாயத்தை பின்பற்ற ஆரம்பித்திருக்கலாம். கடந்த தசாப்தத்தில் இலங்கையிலிருந்து சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்ற சிறிய குழுவினர் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது. விசாரணைகளின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் தொடர் தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் காணப்படுவதால் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளுக்கு அதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தசாப்தத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் பயிற்சி பெற வெளிநாட்டுக்குப் பயணித்த இலங்கையர்களின் ஒரு சிறிய குழுவே இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளனர் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments