ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு ??


ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு வெடிகுண்டு இல்லையென பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகளும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தின் மலசலகூடத்தில், கைவிடப்பட்ட நிலையில் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பீதியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி பொலிஸாருக்கு அறிவித்தனர். குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சகிதம் அங்கு சென்று சென்ற பொலிஸார் மற்றும் இராணுவம், குறித்த பொதியை பரிசோதித்து அங்கு குண்டு அல்லது வெடிபொருட்கள் இல்லையென்பதை உறுதிசெய்துள்ளது. தற்போது அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments