பலாலியில் இராணுவத்திற்கு அஞ்சலியாம்?


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுக்க முற்பட்ட வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கொழும்;பு அரச தலைமையினால் தடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நினைவேந்தலிற்கு முதல்நாள் இரவு விடுக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் இறுதி நேரத்தில் தனது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான பயணத்தை கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே யுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்த, அங்கவீனமடைந்த “இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பத்தாண்டு பூர்த்தி" வடமாகாண நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்; தலைமையில் இன்று (20) முற்பகல் பலாலியில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகண அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்கள், வடமாகாண சபை திணைக்களின் தலைவர்கள், யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி, யாழ் விமானப்படைத் தளபதி, யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்ததாக ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments