செத்து மிதக்கும் மீன்கள்?

மன்னார், விடத்­தல்­தீவு நாயாத்து வெளி நாயாறு பகு­தியில் கடந்த சில தினங்­க­ளாக பல ஆயிரக் கணக்­கான மீன்கள் இறந்து மி­தந்து கொண்­டி­ருக்­கின்­றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடக்கம் குறித்த ஆற்­றுக்குச் சற்றுத் தொலைவில் இறால் வளர்ப்புப் பண்ணை ஒன்­றுக்­கான வேலைத் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் மீன்கள் உயி­ரி­ழப்­புக்கு நீர் இறைப்பு கார­ண­மாக இருக்­கலாம் என மீன­வர்கள் சந்­தேகம் தெரி­வித்­துள்­ளனர்.இந் நிலையில், அந்தப் பண்­ணைக்கு நாயாற்­றி­லி­ருந்து நீரை எடுக்கும் நோக்­கோடு வாய்க்கால்கள் வெட்­டப்­பட்டு குழாய் மூலம் நீரை இறைத்­துள்­ளனர்.
இது தொடர்பில் கரை­யோர பாது­காப்புத் திணைக்­களம், கடற்­றொழில் நீரியல் வளத்­துறை திணைக்­களம், நீர்ப்­பா­சனத் திணைக்­களம், மாந்தை மேற்கு பிர­தேச செய­லகம் உட்­பட உரிய திணைக்­க­ளங்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்தி உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.’
மேலும் மன்னார் நீதிவான் நீதி­மன்­றுக்கும் குறித்த சம்­பவம் தொடர்­பாக அறிக்கை சமர்ப்­பித்து வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக விடத்தல்தீவு மேற்கு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments