நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் விசாரணை நடாத்த இணக்கம்

பயங்கரவாத தாக்குதல்கள் தொடா்பில் நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் விசாரணை நடாத்தவேண்டுமானால் எந்த தடையும் விதிக்கப்படாது. என சபாநாயகா் கரு ஜயசூாிய அறிவித்துள்ளாா்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு தரப்பினரை பணிக்கும் பொறுப்பு தம்முடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு எந்த வகையிலும் தடைகளை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு ஆங்கில பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் இடையூறு செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments