பாடசாலைகள் தொடக்கம்:பொறுமை காக்க கோரிக்கை!


இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னராக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் இராணுவம் காவல்துறை குவிக்கப்படடிருந்த போதும் மாணவர்களது வரவு மிக குறைவாகவேயிருந்தது.

பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களது பொதிகள் சோதனையிடப்பட்ட பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே இதுவரை செயற்பட்டதைப் போன்று பொறுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் இலங்கையர்கள் அனைவரும் செயற்பட வேண்டுமென, பேராயர் கர்தினால்  மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியன்மையை அடுத்து, அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்த நிலையில், இந்த நிலையைக் கட்டுபடுத்துமாறு தான் பொறுப்பானவர்ளுக்கு அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.

எனவே கடந்த சில நாள்களாக புத்திசாலித்தனத்துடனும் பொறுமையாகவும் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலும் கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், ஏனைய தரப்பினரிடமும்  மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரின் செயற்பாடுகளால் கலவரமடையாமல் குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொய்த் தகவல்கள், தூண்டுதலான கருத்துகள், மக்களைத் தூண்டிவிடும் சமூக வலைத்தளங்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும்  பேராயர் கர்தினால்  மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.ய

No comments