வைத்தியருக்கு வந்தது சோதனை!


கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் செய்கு சியாப்தீன் மொஹமட் எனும் வைத்தியர் தொடர்பில் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குருணாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட  சத்திரசிகிச்சைகளுக்கு உட்பட்ட பெண்கள் கருத்தடை நிலைக்கு உட்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று அறிவித்துள்ளது.
சந்தேகநபரான வைத்தியர் சுமார் 8000 சத்திரசிகிச்சைகளை முன்னெடுத்துள்ளதாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். அதேபோன்று அந்த சத்திரசிகிச்சைகளில் 4000 பேருக்கு கருத்தடை சிகிச்சைகள் அளித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நாம் அது தொடர்பில் விசாரணை நடாத்தி வருகின்றோம்.
இதுதவிர, குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் பிறந்த பிள்ளையொன்றை வேறு ஒரு குடும்பத்துக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இது அந்த பிள்ளையைப் பெற்ற தாயின் விருப்பத்தின் பேரில் செய்துள்ளார். ஆனால், அவ்வாறு செய்திருப்பது பிள்ளையின் பெயரில் மாற்றத்தை செய்து என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் அது தொடர்பிலும் விசாரணை முன்னெடுத்துள்ளோம். அந்த அறிக்கை தற்பொழுது சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குருணாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் அறிவித்துள்ளது.

No comments