மு.க.ஸ்ராலினிற்கு ஈழம் வர முன்னாள் முதல்வர் அழைப்பு!


நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியைஅபாரவெற்றிக்குவழி நடத்தியதாக  மு.க.ஸ்ராலினிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

இன்று அவர் திராவிட முன்னேற்ற கழக தலைவர்  மு.க.ஸ்ராலினிற்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் திராவிட முன்னேற்றகழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மேன்மேலும் வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். 

இலங்கையில் இறுதியுத்தம் நடைபெற்றகாலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போது திராவிட முன்னேற்ற கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்றும்  ஏமாற்றமும் மற்றும் கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் எமது மக்களின் அரசியல் ,பொருளாதார மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்.   
இதற்கு என்னாலான சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் நான் வழங்குவேன்.  அத்துடன் எமது மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காகவும் எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையேசமூக,பொருளாதாரமற்றும் கலாசாரரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் நீங்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்று இந்தசந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குநான் தயாராக இருக்கின்றேனெனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments