முள்ளிவாய்க்கால் பேரவலம்! பிரித்தானியாவில் 3ஆம் நாள் போராட்டம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு 3வது நாளாக தொடரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

ஸ்ரீலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரமானது 11.05.2019 அன்று பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது.

தமிழர் ஒருங்கினைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற இந்த எழுச்சி நிகழ்வில் அடையாள உண்ணாவிரதம், எழுச்சிஉரை, முள்ளிவாய்க்கால் இனஅழிப்புத் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் போன்றன நடைபெற்று வருகின்றன, 

நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (13.05.2019 திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு வழமைபோல் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை இளையதம்பி தெய்வேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதன் பின் மலர் வணக்கத்தைத் தொடர்ந்து தமிழீழ உணர்வாளர்களான டென்சிகா, சுஜீவன்,
 பாலகிருஷ்ணன், நிரோச்குமார் ஆகியோரால் அடையாள உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.



No comments