வேல்முருகன் திடீர் டில்லி பயணம்! கசிந்தது இரகசியத் தகவல்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் இரகசியமாகத்   தலைநகர் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது  அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத.

அதிமுக, பாஜக கூட்டணியில்,  பாமகவுக்கு எதிரான பிரச்சாரக் களத்தில் வன்னியர் சங்கங்களுடன் இணைந்து கைகோர்த்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். திமுக கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று  இரவு வேல்முருகன் திடீரென டெல்லி சென்றுள்ளார் என்றும் ஆனால் அவர் எதற்காக டெல்லி சென்றுள்ளார், யாரை பார்க்க என்பது ரகசியமாகவே உள்ளது. அவரின் கட்சியினருக்கு கூட இவரின் பயணத்திட்டம் பற்றி தெரிவிக்கவில்லையாம்.

எனினும்  அரசியல் காரணங்களாக இருந்தால் அவரே சொல்லியிருப்பார். எனவே இது தனிப்பட்ட தேவைக்கான பயணம் என்றே அவரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

No comments