கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த 5 பேர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம்  ஆலத்தூரில் உள்ளது சரஸ்வதி வித்யாலயா பாடசாலையில் கிணறு துப்பரவு  செய்யும் போது கயிற்றின் மூலம் இறங்கும்போது  கயிறு அறுந்து விழுந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை தீயணைப்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிணற்றில் கிடந்த 6 பேரை வெளியே கொண்டு வந்தனர். எனினும் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதும், ஒருவர் உயிருக்குப் போராடி வருவதும் தெரிந்த்ததையடுத்து படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments