முள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்

18.05.2019 தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாளான முள்ளிவாய்க்கால் இன அழிப்பின்  10 ஆண்டுகள் வலிசுமந்த பயணத்தினை எழுச்சி பூர்வமாக நினைவுகொள்ளும் முகமாகவும் தமிழினத்திற்கு நடந்த இனஅழிப்பினை உலக அரங்கில் உரத்துக்கூறும் முகமாகவும் "மே18 தமிழின அழிப்புநாள்" பிரித்தானியாவிலே தழிழர் ஒருங்கினைப்புக் குழுவினால் எழுச்சி கொள்ளப்பட இருக்கின்றது.

11.05.2019 தொடக்கம் 17.05.2019 வரை முள்ளிவாய்க்கால் துக்க வாரத்திலே முள்ளிவாய்க்கால் பேரவழத்தின் வலிசுமந்த வீதியோர விழிப்புணர்வுக் கண்காட்சி, அடையாள உண்ணிவிரதம், மற்றும் வேற்றின மக்களுக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் ஆகியன இடம் பெற இருக்கின்றது.

மே 18 அன்று மாபெரும் எழுச்சிப்பேரணி ஒன்று இடம்பெற இருக்கின்றது.

இந் நிகழ்வு தொடர்பான  கலந்தாய்வு மற்றும் பணிப்பகிர்வு ஆகியன 07.04.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில்
Sutton பகுதியில் நடைபெற்றிருந்தது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் இவ் ஒன்று கூடலில் கலந்துகொண்டிருந்தார்கள்.

அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஒன்றுகூடலில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கான நேரங்கள், இடம் மற்றும்   செயற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு பொறுப்புகளும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் துக்கவாரமான 11.05.2019 தொடக்கம் 17.05.2019 வரை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க விரும்புபவர்கள் கீழுள்ளபொறுப்பாளர்களை தொடர்புகொண்டு உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

இந்த ஒன்று கூடலைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும் நடைபெற்றது. தாயக விடுதலைப் போராட்டத்திலே தம்மை அர்ப்பணித்து வீரச்சாவடைந்த நடுகல் நாயகர்களை நினைந்து அவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக உறுதிமொழி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

No comments