ஷங்ரிலா விடுதி தற்கொலைத்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்!

கொழும்பு ஷங்ரிலா விடுதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாரி, அவிசாவளை - வெல்லம்பிட்டி வீதியிலுள்ள நிறுவமொன்றின் உரிமையாளரான இன்சான் சீலவனன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் குறித்த நிறுவனத்தின் 9 ஊழியர்கள், வௌ்ளம்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்வரம் 6ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments