இலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு!


இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 கடல்வழியாக யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக நேற்று மாலை முதல் கடலோர காவல் குழுமப் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 முன்னதாக கடலோர காவல் குழும கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, வடகாடு உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments