ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது


சிறிலங்காவில் நேற்று மாலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளை அடுத்து, பாதுகாப்புக் கருதி, நேற்றுமாலை நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெறிச்சோடியிருந்த வீதிகள்

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நேற்று மாலை தொடக்கம் வெறிச்சோடி அமைதியாக இருந்தன.பரபரப்பாக இயங்கும் கோட்டை தொடருந்து நிலையப்பகுதி  வெறிச்சோடியிருந்தது.


மீண்டும் பேருந்து, தொடருந்து சேவைகள்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெறும் என்று சிறிலங்கா போக்குவரத்துச் சபை மற்றும் தொடருந்து திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.

No comments