தேர்தலில் போட்ட 100கோடியை பிக்பாஸிடம் கேட்டு அடம்பிடிக்கும் கமல்!

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இருவேறு விதமான  விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் மக்களிடத்தில் வெகுவாக ஈர்த்துள்ளது.

இரண்டு பாகங்கள் முடிந்துள்ள நிலையில்  இவ்விரு நிகழ்ச்சிகளையும் நடிகர் கமலஹாசன்  தொகுத்து வழங்கியதற்காக சினிமாவில் அவர் நாயகனாக நடிக்க வாங்கிய சம்பளத்தைக் விட அதிகம் வாங்கியதாக கூறப்பட்டது. இவ்வாண்டு இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தயாராகவுள்ள நிலையில்,

 இம்முறை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு வந்த போதும், மீண்டும் விஜய் தொலைக்காட்சியே பிக் பாஸ் மூன்றாம் பாகத்திற்க்கான உரிமையை பெற்றுள்ளதாம், அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறாராம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், ஒரு நாளுக்கு ஒரு கோடி வீதம் நூறு கோடி சம்பளம் வேண்டுமென்று கமல் அடம்பிடித்துள்ளாராம்.

இதனால் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ச்சியடைந்தாலும். விளம்பரத்தினால் வருமானம் கோடிக் கணக்கில் வருவதால் விஜய் தொலைக்காட்சி தலை அசைத்துள்ளது , அதற்க்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீதி மையம் எனும்  கட்சியை ஆரம்பிக்கும் முன் கமல் மறைமுகமாக அரசியல் பேசியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான், இதனால் இப்போதும்கூட  விஜய் தொலைக்காட்சிதான் அவரின் முதலாளி என்று அரசியல்ரீதியாக பலர் விமர்சனம் வைக்கின்றனர். அதேவேளை சினிமா பாணி அரசியல் செய்கிறார் இது கட்சியல்ல ஒரு தனியார் நிறுவனம் என்று குற்றம் சாட்டி பல முக்கிய நிர்வாகிகள் விலகியும் உள்ளனர்.
எனவே இந்த தேர்தலில் அவரால் எதையும் சாதிக்க முடியாது என்றும் இவர் பாஜகவின்B அணி என்றும் விமர்சனங்களும் வைக்கப்படும் நிலையில்.
அரசியலில் சாதிக்கமுடியாது என்ற உண்மை நிலையை உணர்ந்ததினாலேயே தேர்தலில் செலவு செய்த பணத்தையும் கட்சிக்கான நிதியுமாகவே இந்த 100 கோடி சம்பளத்தை கேட்டிருக்கிறார் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

No comments