காவல்துறைக்கும் யாழ்.மாநகரசபையில் கண்டன தீர்மானம்?





எடுத்ததற்கெல்லாம் தீர்மானம் நிறைவேற்றி ஊடகங்களிற்கு அனுப்பி வைப்பது தற்போது வடகிழக்கு உள்ளுர் அரசியல்வாதிகளது பாரம்பரியமாகியுள்ளது.அவ்வகையினில் வீதியோர கம்பங்களை அகற்றாமை தொடர்பில் காவல்துறைக்கு கண்டனம்  தெரிவித்து யாழ்.மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக கேபிற்றல் தொலைக்காட்சியால் கேபிள் கம்பங்கள் நடப்பட்டன என்று தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை ஜனவரி மாத முற்பகுதியில் அகற்றப்பட்டன.

இது தொடர்பில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த தென்னிலங்கை நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்; நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் எதிராக குற்றவியல் நடைமுறைக் கோவையின் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தது.

அந்த வழக்கில் முதல்வர் இ.ஆனல்ட், கேபிள் கம்பங்களை அகற்றியமை சரியானது என யாழ்ப்பாணம் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்தக் கட்டளையை ஆட்சேபித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த்து கேபிள் நிறுவனம்.

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு மேலாகியும் சட்டத்துக்குப் புறம்பாக கேபிள் கம்பங்களை முதல்வர் அகற்றாமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி ஆகியன கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து காவல்துறை இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த பின்னடிப்புச் செய்வதற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் முன்மொழிந்தார். அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வ.பார்த்திபன் வழிமொழிந்தார்.காவல்துறைக்;கு எதிரான கண்டனத் தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது

No comments