துரையப்பாவில் சிங்கள நல்லிணக்கம்?


செம்மணி நாயகி சந்திரிகாவை முன்னிறுத்தி தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க தெற்கு குத்திமுறிகின்ற போதும்  அது பெயரளவிலேயே நடந்துவருகின்றது.இலங்கையின் தேசிய நல்லிணக்க அமைச்சு மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய சமாதான புத்தாண்டு உதயம்- தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா நிகழ்வு இன்று யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

செம்மணி நாயகி சந்திரிகா முன்னாள் அமைச்சர் பௌசி என பலரும் வருவிக்கப்பட்ட போதும் அது யாழ்ப்பாணத்தில் நடந்த சிங்கள புத்தாண்டாகவே இருந்தது.

சிங்கள பாரம்பரிய உடைகளுடன் தருவிக்கப்பட்ட பெண்கள் பால் காய்ச்சி பொங்கலிட்ட நிகழ்வாக அது இருந்ததேயன்றி தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை கொண்டுவருவதாக இருந்திருக்கவில்லை.

இலங்கைப்படைகள் முதல் அரசு ஈறாக இத்தகைய நல்லிணக்க நாடகங்களை அரங்கேற்றிவருவது தெரிந்ததே.

No comments