இலங்கை விமானப்போக்குவரத்து அபாயத்தில்?


கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி செயற்படும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களிடம் விமானங்களை தாக்கியழிக்கவல்ல ஏவுகணைகள் இருப்பதை கருணா குழு முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருணா புலிகள் அமைப்பிலிருந்து விலகியபோது தன்வசமிருந்த ஏவுகணைகளை பேரம்பேசி முஸ்லீம் தரப்பிடம் ஒப்படைத்ததை குறித்த கருணா குழு முக்கியஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே தென்னிலங்கையின் ;வெலிப்பன்ன ராம்யா வீதி பிரதேசத்தின் முஸ்லிம் கிராமமொன்றிலிருந்து இன்று காலை விமானங்களை தாக்கி அழிக்கும் 5 குண்டுகளும் டெட்டனேட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கு, கிடைத்த தகவலுக்கமைய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் குண்டுகள் 8 அங்குலம் நீளமான ( 5-0) ரக குண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் அவை கருணா குழுவிடமிருந்து பெறப்பட்டவையாவென்பது உறுதியாகவில்லை.

No comments