சாய்ந்தமருதில் பதற்றம்! துப்பாக்கிச் சண்டை!!


கிழக்கு மாகாணம் கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது காவல்துறையினர் மற்றும் படையினர் மீது சந்தேக நபர்களால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் தற்கொலை அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே சந்தேக குழுவினருடன் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து குண்டு தயரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இலட்சம் சிறிய இரும்பு உருளைகள் , 150  ஜெலட் நைட் குச்சிகள், மின் கலங்கள், வயர்கள், அமில வகைகள் என ஏராளமான வெடிபொருள் தயாரிக்கும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒரு  மடிக்கணினி, ட்ரோன் கமரா மற்றும் அய்.எஸ் அமைப்பின் இலாஞ்சனையுடனான கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.


No comments