காதலிக்காக கடலில் வீடு கட்டிய கோடீஸ்வரருக்கு மரண தண்டனையா?


கோடீஸ்வரர்களான   அமெரிக்காவை சேர்ந்தவர் சாட்எல்வர்டோஸ்கியும்  அவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட்டும் கடலுக்குள் கொங்கிறீட் போட்டு வீடு கட்டியுள்ளனர். 

கடற்கரையில் இருந்து 13 கடல் மைல் தொலைவில்  தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. 

இவவ்வீட்டின் புகைப்படத்தை  முகநூலில் வெளியிட்டனர்.

இதைக்கண்டுபிடித்த தாய்லாந்துக் கடற்படையினர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


முறைப்பாட்டில் அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனது காதலி சுப்ரானே எங்காவது சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினார். அவருக்காக வித்தியாசமாக கடலுக்குள் வீடு கட்டினேன் எனத் தெரிவித்துள்ளார் சாட்எல்வர்டோஸ்கி.

எங்களது வீடு கடற்கரையில் இருந்து 13 நாட்டிகல் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்து கடல் எல்லையைக் கடந்து இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. எனவே தாய்லாந்தின் இறையான்மையை மீறவில்லை. என சாட் எல்வார்டோஸ்கி தெரிவித்தார்.

தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

No comments